ஏமன் எல்லையில் சவுதி இராணுவ ஜெனரல் பலி
பிரசுரிக்கப்பட்டது
ஏமன் உடனான தமது எல்லைக்கு அருகே இராணுவ ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
அங்கு சவுதி தலைமையிலான கூட்டுப் படையினர் ஹூத்திப் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரிகேடியர் ஜெனரல் இப்ராஹிம் ஹம்சி தமது நாட்டை பாதுகாத்து வந்தார் என குறிப்பிட்ட சவுதி செய்தி நிறுவனம், ஆனால் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.




























