சிரியாவின் நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் ஐநா பொதுச் சபைக் கூட்டம் கவனம் செலுத்துகிறது

பிரசுரிக்கப்பட்டது

ஐநாவின் பொதுச் சபைக் கூட்டத்துக்காக நியூயார்க்கில் உலகத் தலைவர்கள் கூடியுள்ள நிலையில், அங்கு இன்று நடைபெறுகின்ற தீவிரமான இராஜீய நடவடிக்கைகளின் கவனம், சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு யுத்தம் மீது குவிந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதில் கலந்துகொள்கிறார். அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து தனது திட்டங்களை முன்வைப்பார்.

சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸ்ஸத்தின் முக்கிய கூட்டாளியாக இருந்துவரும் ரஷ்யா, சிரியாவில் தனது இராணுவப் பிரசன்னத்தை வலுப்படுத்தியுள்ளது.

சிரியாவில் அரசியல் மாற்றம் ஏற்படும் வரையில், அதிபர் அஸ்ஸத் பதவியில் நீடிக்கலாம் என்பதற்கு மேற்கத்திய தலைவர்கள் தமது முந்தைய நிலைபாட்டிலிருந்து இறங்கிவந்து ஒப்புக்கொண்டுள்ளனர்.

சிரியாவின் அகதிகள் தொடர்ந்தும் ஐரோப்பாவுக்கு சென்றுக்கொண்டிருப்பதும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் எழுந்துள்ள அச்சுறுத்தலும், சிரியாவின் உள்நாட்டுப் போரை நிறுத்த ஒரு உடனடி திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.