சிரிய விவகாரம்: ரஷ்யா - அமெரிக்கா இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை
பிரசுரிக்கப்பட்டது
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிய பிறகும், சிரிய விவகாரத்தைக் கையாளுவது குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.

பட மூலாதாரம், AP
இருந்தபோதும், சிரியாவின் அதிபர் அசாத் வெளியேற வேண்டுமெனகூற ஒபாமாவுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் புடின் கூறினார்.
சிரிய ராணுவத்தை மேலும் பலப்படுத்துவது எப்படி என ரஷ்யா யோசித்துவருவதாகக் குறிப்பிட்ட புடின், ரஷ்யாவின் தரைப்படைகளை அங்கு அனுப்பப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
சிரிய அதிபராக அசாத் நீடித்தால் அங்கு ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு வழியில்லை என்பதை ஒபாமா வலியுறுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




























