குண்டுஸ் நகரை மீட்டதாக ஆப்கான் அரசு கூறுகின்றது
பிரசுரிக்கப்பட்டது
குண்டுஸ் நகரை மீளக் கைப்பற்றிவிட்டதாக ஆப்கானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனாலும் அங்கு சில பகுதிகளில் இன்னமும் கடுமையான சண்டை நடப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
கடந்த திங்களன்று அதிரடித் தாக்குதல் மூலம் தலிபான்கள் அந்த நகரைக் கைப்பற்றியிருந்தனர்.
நகரில் எஞ்சியுள்ள சில இடங்களின் எதிர்ப்புகளை அகற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் அறிவித்தலை நிராகரிக்கும் தலிபான்கள், நகரமும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் தமது கட்டுப்பாட்டிலேயே இன்னமும் இருப்பதாக கூறுகின்றனர்.
குண்டுஸ் நகரம் மீளக்கைப்பற்றப்பட்டாதா என்பதை தன்னால் உறுதி செய்ய முடியாது உள்ளதாக ஆப்கானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான படைகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.




























