ஜிம்பாப்வேயில் 'வாட்டர் ஹீட்டர்'களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தத் தடை

பிரசுரிக்கப்பட்டது

மின்பற்றாக்குறையில் தவித்துவரும் ஜிம்பாப்வே, புதிய சூரிய மின் சக்தி கொள்கையை வெளியிட்டுள்ளது.

மின்வாரிய மின்சாரத்தை இனி வாட்டர் ஹீட்டர்களுக்கு பயன்படுத்த முடியாது என ஜிம்பாப்வே மின் வாரியம் கூறியுள்ளது.
படக்குறிப்பு, மின்வாரிய மின்சாரத்தை இனி வாட்டர் ஹீட்டர்களுக்கு பயன்படுத்த முடியாது என ஜிம்பாப்வே மின் வாரியம் கூறியுள்ளது.

அதன்படி புதிதாக கட்டப்படும் அனைத்து வீடுகள், வர்த்தக கட்டடங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும் வாட்டர் ஹீட்டர்களை பயன்படுத்துவதை அரசு தடை செய்யப்போவதாக மின் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதற்குப் பதிலாக, சூரிய சக்தி மின்சாரத்தையே பயன்படுத்த வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போதுள்ள வீடுகளில் இருக்கும் வாட்டர் ஹீட்டர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அகற்றப்படும்.

இதன் மூலம் 400 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும் என ஜிம்பாப்வே கருதுகிறது.

ஜிம்பாப்வேயில் தற்போது 60 சதவீதம் பேருக்கு மின்சார வசதி கிடையாது.