ஜெர்மனி இணைப்பு தின கொண்டாட்டம்
பிரசுரிக்கப்பட்டது
இரண்டு ஜெர்மனிகளும் இணைந்ததன் 25ஆம் ஆண்டு தின கொண்டாட்டங்கள் ஜெர்மனியில் துவங்கியுள்ளன.

பட மூலாதாரம், GILLES LEIMDORFER AFP
கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்த கிழக்கு ஜெர்மனியும் முதலாளித்துவ ஆட்சியின் கீழ் இருந்த மேற்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த தினம் அக்டோபர் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டுவருகிறது.
ஃப்ராங்ஃபர்ட் நகரில் நடந்த கொண்டாட்டங்களில் ஜெர்மன் ஆட்சித் தலைவர் ஏங்கலா மெர்க்கலும் அதிபர் ஜோவாச்சிம் காக்கும் கலந்துகொண்டனர்.
பெரும் எண்ணிக்கையில் குடியேறிகள் நுழைவதால், ஜெர்மனி திணறிவரும் நிலையில் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்துவருகின்றன.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி, இந்த விவகாரத்தின் காரணமாக, ஏங்கலா மெர்கலின் செல்வாக்கு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.




























