"மேலும் 30 லட்சம் சிரிய அகதிகள் வெளியேறலாம்"
பிரசுரிக்கப்பட்டது
சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடர்ந்தால், மேலும் 30 லட்சம் அகதிகள் அங்கிருந்து வெளியேறக்கூடும் என ஐரோப்பிய யூனியனை துருக்கி எச்சரித்திருக்கிறது.

பட மூலாதாரம், EPA
இந்தத் தகவலை திங்கட்கிழமையன்று துருக்கி அதிபர் எர்துவான் தனக்கு அளித்ததாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய சிரிய அதிபர் பஷார் அல் - அஸாதுக்கு வெற்றி கிடைக்கும் பட்சத்தில் பெரிய அளவில் குடியேறிகள் வெளியேறுவார்கள் என்றும், ரஷ்யா, இரான் நாடுகளின் தலையிடுவது இதனை மேலும் எளிதாக்கியிருக்கிறது என்றும் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.




























