மலேசிய அரச முதலீட்டு நிதி முறைகேடு: குற்றவியல் வழக்கு தொடர பரிந்துரை

பிரசுரிக்கப்பட்டது

மலேசியாவில் பிரதமர் நஜீப் ரஸாக் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய அரச முதலீட்டு நிதி முறைகேடு விவகாரத்தில் குற்றவியல் வழக்கு தொடருமாறு அந்நாட்டின் மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிதி முறைகேடு புகார் காரணமாக பிரதமருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளன.
படக்குறிப்பு, இந்த நிதி முறைகேடு புகார் காரணமாக பிரதமருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளன.

முறையான நடைமுறைகள் இல்லாமல், வெளிநாட்டில் சுமார் 2 பில்லியன் டாலர் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணத்தைத் திரும்பக் கொண்டுவர வேண்டுமென்றும் மத்திய வங்கி கூறியுள்ளது.

2009-ம் ஆண்டில் 1எம்டிபி என்ற பெயரில் இந்த நிதியத்தை பிரதமர் அமைத்தார்.

அண்மைக்காலங்களில், இந்தப் பணம் தொடர்பில் வெளியாகியிருந்த சர்ச்சைக்குரிய பல தகவல்களைத் தொடர்ந்து, பிரதமர் நஜீப் பதவி விலக வேண்டும் என்று போராட்டங்களும் நடந்துள்ளன.