புதிய கண்டம்தாண்டும் ஏவுகணை சோதனை வெற்றி: இரான்
துல்லியமாக இலக்கைத் தாக்கக்கூடிய கண்டம்தாண்டும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக இரான் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
நிலத்திலிருந்து புறப்பட்டு நிலத்தைத் தாக்கும் இமாத் என்ற இந்த ஏவுகணைகள் தங்கள் இலக்கைத் தாக்கும்வரை, தொலைவிலிருந்து இயக்க முடியும் என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹுசைன் தெகன் தெரிவித்திருக்கிறார்.
விரைவிலேயே ராணுவத்தின் ஏவுகணைப் பிரிவுக்கு இந்த இமாத் வகை ஏவுகணைகள் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இரானின் முந்தைய ஷஹாப் ஏவுகணையோடு ஒப்பிடும்போது, 1,700 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய இந்தப் புதிய ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்குவதில் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பாக இரான், உலகின் சக்திவாய்ந்த பிற நாடுகளுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் அதன் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் என அந்நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய இந்த ஏவுகணை சோதனை நடந்திருக்கிறது.




























