ஃபேஸ் புக் பதிவு; மியன்மார் ராணுவப் புகாரை அடுத்து பெண் கைது

பர்மிய ராணுவ தளபதி பற்றிய ஃபேஸ் புக் கருத்தை அடுத்து பெண் கைது
படக்குறிப்பு, பர்மிய ராணுவ தளபதி பற்றிய ஃபேஸ் புக் கருத்தை அடுத்து பெண் கைது
பிரசுரிக்கப்பட்டது

மியன்மாரில் பெண் ஒருவர், ஃபேஸ்புக்கில் இட்ட பதிவு ஒன்றைப் பற்றி, அந்நாட்டின் ராணுவம் தெரிவித்த புகாரை அடுத்து, அந்தப் பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சா சாண்டி துன் என்ற அந்தப் பெண், நாட்டின் தலைமைத் தளபதி மின் ஆங் ஹ்லெயிங்கை ராணுவத்தின் புதிய சீருடையில் காட்டும் ஒரு படம் ஒன்றின் மீது கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார்.

அந்த சீருடை, பர்மிய எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி அணியும் சராங்கைப் ( லுங்கி போன்ற உடை) போல இருந்தது என்று சில இணைய பயன்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். சா சாண்டி துன் இந்த உடையை ராணுவ தளபதி அவரது தலையைச் சுற்றிக் கட்டிக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

இது பர்மிய கலாசாரத்தில் ஒரு பெரிய நிந்தனை என்று கருத்தப்படுவதாகக் கூறும் பிபிசியின் யாங்கூன் செய்தியாளர் ராணுவம் இது குறித்து போலிசாரிடம் புகார் ஒன்றைப் பதிவு செய்ததாகக் கூறினார்.