போலி பயண ஆவணங்களை ஏற்பாடு செய்யும் குற்றக் கும்பல் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

போலிக் கடவுச் சீட்டுகளை பல ஆயிரக்கணக்கான யூரோக்களுக்கு விற்பதன் மூலம் குடியேறிகள் நெருக்கடியை குற்றக்கும்பல்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதாக ஐநா கூறுகின்றது.

இதனால் அந்த குழுக்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றன.

கடல் மற்றும் தரை மூலமான ஆபத்தான பயணங்களை தவிர்க்க, போலி ஆவணங்களுடன், விமானத்தில் பயணித்து தமது அதிர்ஸ்டத்தை சோதித்துப் பார்க்க அகதிகள் விளைகிறார்கள்.

இது மோசடி ஆவணங்களை தயாரிக்கும் கும்பல்களுக்கு வாய்ப்பாக போய்விடுகிறது.

இப்படியான குற்றக்கும்பல்கள் குறித்த பிபிசியின் காணொளி.