சிறுவனுக்கு துப்பாக்கி 'விற்ற' அமெரிக்கக் கடைக்கு 60 லட்சம் டாலர் அபராதம்

அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய துப்பாக்கி சட்டங்கள்
படக்குறிப்பு, அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய துப்பாக்கி சட்டங்கள்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் மிக அதிகமாக துப்பாக்கிகளை விற்கும் நிறுவனம் என்று ஒரு காலத்தில் கருதபட்ட ஒரு நிறுவனம், சட்டவிரோதமாக விற்ற ஆயுதங்களால் காயமடைந்த இரு போலிஸ் அதிகாரிகளுக்கு சுமார் 60 லட்சம் டாலர்கள் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பேட்ஜர் கன்ஸ் என்ற இந்த நிறுவனம், அதனிடம் 2009ல் துப்பாக்கி வாங்கிய ஒருவர் அவர் பக்கத்தில் இருந்த பதின்பருவ சிறார் ஒருவரிடம் அதை கொடுக்கும் எண்ணத்தில் வாங்கினார் என்பதை உணர்ந்திருக்கவேண்டும் என்று விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வோக்கி நகர நீதிமன்ற ஜூரிகள் குழு தீர்ப்பளித்தது.

இந்த பதின்பருவச் சிறுவனுக்கு துப்பாக்கியை வைத்துக்கொள்ள சட்டரீதியாக உரிமை இல்லை.

அந்த சிறுவன் பின்னர் சாலையோர நடைபாதையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும்போது அதைத் தடுத்த இரண்டு போலிஸ் அலுவலர்களின் முகத்தில் இந்தத் துப்பாகியால் சுட்டுவிட்டான்.

குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட 500 ஆயுதங்கள் இந்த கடையிலிருந்து வாங்கப்பட்டவை என்று தெரியவந்ததாக அதிகாரிகள் கூறினர்.