இரு பாலத்தீனர்கள் சுட்டுக்கொலை
இன்று காலை இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், இஸ்ரேலியர்களை தாக்குவதற்கு முயன்ற, 2 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்குக் கரை நகரான ஹெப்ரொனில், பாலஸ்தீன வாலிபர் ஒருவர், இஸ்ரேலியர் ஒருவரை கத்தியால் குத்த முயன்றதை அடுத்து, குறித்த இஸ்ரேலியர் அந்த பதின்ம வயது சிறுவனை சுட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்று சற்று நேரத்தில், கிழக்கு ஜெருசலேமில் சோதனைச் சாவடி ஒன்றில் கத்தி ஒன்றை காட்டி மிரட்டிய பாலஸ்தீனியர் ஒருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அண்மைய வாரங்களில் இதனை ஒத்த தாக்குதல்களில் 40 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
அங்கு அமைதியை வலியுத்துமாறு கோரி, நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெரி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய தலைவர்களை தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டிருந்தார்.




























