ஹவுபாரா பறவை-வேட்டைத் தடைக்கு எதிராக பாக். அரசாங்கம் மனு

பட மூலாதாரம், AFP Getty
உலகில் அருகிவரும் உயிரினமான ஹவுபாரா பஸ்டர்ட் பறவைகளை வேட்டையாடுவதற்கு உள்ள தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கம் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தத் தடை விதிக்கப்படும் வரை அரேபிய வளைகுடா நாடுகளிலிருந்து வரும் அரச குடும்பத்தினருக்கு இந்தப் பறவைகளை வேட்டையாடுவதற்கு தொடர்ந்து அனுதி வழங்கப்பட்டுவந்தது.
இந்த ஹவுபாரா பஸ்டர்ட் பறவைகளை வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து காலத்துக்கு காலம் குடிபெயர்ந்து வந்துசெல்கின்றன.
குறித்த தடை ஏற்கனவே நலிவடைந்துள்ள மத்திய கிழக்கு நாடுகளுடனான தமது இராஜதந்திர உறவுளை மிக மோசமாக பாதித்துள்ளன என இஸ்லாமாபாத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.
'ஏற்கனவே பலவீனமாக இருக்கின்ற' மத்திய கிழக்கு நாடுகளுடனான தங்களின் ராஜதந்திர உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தனது மனுவில் தெரிவித்துள்ளது.
அரபுலகத் தலைவர்களை வேட்டையாட அழைப்பது தமது வெளிநாட்டுக் கொள்கைகளில் முக்கிய அம்சம் என்று கூறியுள்ள பாகிஸ்தான் அரசாங்கம், மிகவும் சீரான முறையிலேயே இந்த வேட்டைகள் நடந்துவந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த ஹவுபாரா பஸ்டர்ட் பறவைகள் அரபு- வளைகுடா நாடுகளில் அரச குடும்பங்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.
அதன் இறைச்சியை உண்பது பாலியல் வேட்கையை தூண்டும் என்ற நம்பிக்கை மத்திய கிழக்கில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
































