கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி

லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ
படக்குறிப்பு, லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ
பிரசுரிக்கப்பட்டது

கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.

இதன்மூலம், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பதவியிலிருந்த கன்ஸர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வருகின்றது.

ஒரு உண்மையான மாற்றத்திற்காக கனேடிய மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்று லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கான முதலீடுகள் அதிகரிப்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உறுதியான நடவடிக்கைகள், இராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான கனடாவின் விமானத் தாக்குதல்களை நிறுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அளித்திருந்தார்.

43 வயதான ஜஸ்டின்ட் ட்ரூடோ, கனடாவின் முன்னாள் பிரதமர் பியர் ட்ரூடோவின் மகன் ஆவார்.

தொடர்ச்சியாக மூன்று தடவைகள் ஆட்சியிலிருந்த கன்ஸர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பிரதமர் ஸ்டீஃபன் ஹார்பர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.