சிரியா: முரண்படும் வெளிநாட்டு சக்திகள் பேச்சுவார்த்தை மேஜையில்

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, சவுதி அரேபியா மற்றும் இரான் ஆகிய நாடுகளின் மூத்த அதிகாரிகள் ஆஸ்திரியாவின் தலைநகரில் வியன்னாவில் கூடி, சிரியா விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்துகின்றனர்.

சிரியாவின் அதிபர் அஸ்ஸத்தின் எதிர்காலம், கிளர்ச்சிக் குழுக்கள் மீதான நம்பகத் தன்மை மற்றும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் இரண்டு தரப்பிலும் ஆழமான கருத்துவேறுபாடுகள் உள்ளன.