அன்வர் இப்ராஹிமை விடுவிக்க ஐ நா கோரிக்கை

பிரசுரிக்கப்பட்டது

மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் குதவழி உறவில் ஈடுபட்டார் எனக் கூறி தண்டிக்கப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஐ நா கூறுகிறது.

மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்.
படக்குறிப்பு, மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்.

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அன்வர் இப்ராஹிம் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ நா குழுவொன்று கோரியுள்ளது.

ஆண் உதவியாளர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் எனக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் அன்வர் இப்ராஹிமுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.

ஆனால் அக்குற்றச்சாட்டை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

ஐ நா குழுவின் அறிக்கை தனது தந்தை மீது தவறில்லை என்பதை நிரூபித்துள்ளது என, அவரது மகள் நூருல் இசா அன்வர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மலேசிய அரசு இந்த முடிவை ஏற்று அதன்படி நடக்க வேண்டும் எனவும் அன்வர் இப்ராஹிமின் மகள் வலியுறுத்தியுள்ளார்.