பர்மிய தேர்தல்: 'நம்பிக்கை' இழந்த ரொஹிஞ்சா மக்கள்

பிரசுரிக்கப்பட்டது

மியன்மாரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் தான் உள்ளன.

நாட்டின் அதிபராக தெரிவாக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்ட தலைவர் ஒருவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை ஆளுங்கட்சி மறுத்துள்ளது.

ஷ்வே மான் வெளியேற்றப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தியை வெறும் வதந்தி என்று ஆளுங்கட்சி வர்ணித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூசிக்கு நெருக்கமானவராக ஷ்வே மான் பார்க்கப்படுகின்றார்.

இந்தத் தேர்தலில் சூசியின் கட்சி கூடுதல் இடங்களைப் பெறும் என்று பலரும் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால் ரக்கைன் மாநிலத்தில் பௌத்த தேசியவாதிகளே வெற்றிபெறுவார்கள் என்று நம்பப்படுகின்றது.

அந்தப் பிராந்தியத்தில் ரொஹிஞ்சா இன மக்கள் வாக்களிப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் முற்பகுதியில் ஆயிரக்கணக்கான ரொஹிஞ்சாக்கள் அங்கிருந்து வெளியேற முயன்றனர்.

அங்கு சென்ற பிபிசி செய்தியாளரின் நேரடிக் குறிப்பு இது.