37 அசீரியர்கள் இஸ்லாமிய அரசால் விடுவிக்கப்பட்டனர்
பிரசுரிக்கப்பட்டது
பெரும்பாலும் வயதான 37 அசீரிய கிறிஸ்தவர்களை இஸ்லாமிய அரசு குழு விடுதலை செய்துள்ளதாக சிரியாவில் உள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருட முற்பகுதியில், வடகிழக்கு சிரியாவில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட சுமார் இருநூறு பேரில் இவர்களும் அடங்குகிறார்கள்.
கசகே மாகாணத்தில் உள்ள டல்டம்ர் நகருக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அசீரிய மனித உரிமைகள் வலையமைப்பு கூறியுள்ளது.
சிரியாவிலும், இராக்கிலும் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களை இஸ்லாமிய அரசு பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளது.




























