இன்னொரு ஏவுகணையை ஏவியது வடகொரியா

வடகொரியா இன்னொரு ஏவுகணையை ஏவியதாக தென்கொரியா குற்றச்சாட்டு
படக்குறிப்பு, வடகொரியா இன்னொரு ஏவுகணையை ஏவியதாக தென்கொரியா குற்றச்சாட்டு
பிரசுரிக்கப்பட்டது

வடகொரியா தனது கிழக்குக் கடற்கரையிலிருந்து கடலுக்குள் இன்னுமொரு ஏவுகணையை ஏவியிருப்பதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்திருக்கிறது.

உலகின் அணு ஆயுதப்பரவல் மற்றும் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா வாஷிங்டனில் சர்வதேசமாநாடு ஒன்றைக் கூட்டியிருக்கும் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் சீனா உள்ளிட்ட வேறு அணுசக்தி நாடுகள் பங்கேற்கின்றன.

ஜனவரி மாதம் வடகொரியா செய்த அணுச்சோதனைகளைத் தொடர்ந்து அந்நாடு ஏவும் ஏவுகணைகளின் தொடர்ச்சியாக இது நிகழ்ந்திருக்கிறது.

கொரிய தீபகர்ப்பத்தை அணு ஆயுதங்களற்றதாக வைத்திருப்பதற்காக அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயற்படும் என்று அணு ஆயுதப்பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் ஒபாமா தெரிவித்துள்ளார்.

வட கொரியாவுக்கு எதிராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேசத் தடைகளை முழுமையாகவும் கடுமையாகவும் அமுல்படுத்த வேண்டும் என்று சீன அதிபர் சி ஜின்பிங் வலியுறுத்தினார்.

உலகின் இரண்டாவது அணு வல்லரசான ரஷ்யா இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.