மாலத்தீவுகளில் ஊடகச் சுதந்திரம் கோரியவர்கள் கைது

பிரசுரிக்கப்பட்டது

மாலத்தீவுகள் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்குவதாக குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவதூறு மீதான சட்டத்தை கடினமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு கண்டனம்
படக்குறிப்பு, அவதூறு மீதான சட்டத்தை கடினமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு கண்டனம்

அதிபர் அப்துல்லா யமீனின் அலுவலகத்திற்கு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் நோக்கில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது உடலில் பட்டதும் எரிச்சலை ஏற்படுத்தும் வாயுவை பாய்ச்சினர்.

அவதூறு சட்டத்தை கடினமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் அனேகமானோர் ஊடகவியலாளர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்தியாளர் ஒருவர் காணாமல் போனது மற்றும் செய்தித்தாள் ஒன்றைத் தற்காலிகமாக மூடுமாறு அண்மையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்தும் அவர்கள் முறையிட்டனர்.

மாற்றுக் கருத்தாளர்களை மாலத்தீவுகள் அரசாங்கம் நடத்தும் முறை குறித்து அந்த நாட்டு அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் விமர்சனங்களை எதிர்கொள்கிறது.