போகோ ஹராம் `சிறுவர் தற்கொலைதாரிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு'
நைஜீரியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் இஸ்லாமியவாத குழுவான போகோ ஹராம் இயக்கத்தில் சிறுவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளாக பயன்படுத்தப்படுவது கடந்த ஆண்டில் 10 மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty
கடந்த ஆண்டு கேமரூன், சாட், மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் அவ்வாறான தாக்குதல்களில் 44 சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக ஐ.நாவின் சிறுவர்களுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2014ல் 4ஆக இருந்தது.
தற்கொலைக் குண்டுதாரிகள் ஐந்து பேரில் ஒருவர் சிறுவர் என தெரிவிக்கும் ஐ.நாவின் சிறுவர்களுக்கான நிறுவனம், அதில் 75 சதவீதம் பேர் சிறுமிகள் எனவும் தெரிவித்துள்ளது.
போதை ஊட்டப்பட்ட சிறுமிகளின் உடலில் வெடிபொருட்கள் கட்டப்பட்டு அவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
.




























