பாரம்பரிய சிங்கள இசைக் கருவிகள் வழக்கொழிகின்றனவா?

பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் சிங்கள மக்களின் புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டத்தில் ரபான், பெர போன்ற தோல் இசைக் கருவிகளுக்கு முக்கிய இடம் உண்டு.

ஆனால், மத்திய மாகாணத்தில் கூரகல என்ற கிராமத்தில் இந்த பாரம்பரிய இசைக் கருவிகளை தயாரித்து விற்பதை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்கள் இம்முறை தங்களின் தொழில் களைகட்டவில்லை என்று கவலை அடைந்துள்ளனர்.