ஜப்பான் நிலநடுக்கம்: நிவாரணங்களுடன் செல்கின்றன அமெரிக்க இராணுவ விமானங்கள்
ஜப்பானில் ஏற்பட்ட இரண்டு கடும் நிலநடுக்கங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண விமானங்களை அமெரிக்க இராணுவம் அனுப்புகிறது.

பட மூலாதாரம், AFP
சனிக்கிழமை அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களின் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள், குடிநீர் மற்றும் மின்சாரம் இல்லாத நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த வியாழனன்றும் அங்கு ஒரு அதிர்வு ஏற்பட்டது. அந்த அதிர்வு மற்றும் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP
காணாமல் போயுள்ள ஏராளமானோரை காண்டுபிடிக்க மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இடிந்து விழுந்த கட்டடங்களில் சிக்கியுள்ளவர்களை தேடும் நடவடிக்கையும் தொடருகிறது.

பட மூலாதாரம், EPA
இதனிடையே கியூஷூ தீவிலுள்ள குமாமோட்டோ பகுதியில் நூற்றுக்கணக்கான அதிர்வுகள் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளன.
மூன்றாவதாக ஒரு நிலநடுக்கம் ஏற்படுமோ எனும் அச்சத்தை இந்த அதிர்வுகள் ஏற்படுத்தியுள்ளன.

பட மூலாதாரம், AP
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உதிரி பாகங்கள் வருவது குறைந்துள்ளதால், வாகனப்பகுதிகளை இணைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டொயோடா அறிவித்துள்ளது.
நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒரு முக்கிய மையமாகும்.





























