சீன அரச ரகசியங்களை விற்ற குற்றச்சாட்டில் கணினி நிபுணருக்கு மரண தண்டனை

பிரசுரிக்கப்பட்டது

அரச ரகசிய ஆவணங்களை வெளிநாட்டு உளவுத்துறையினருக்கு விற்றதான குற்றச்சாட்டில் கணினி நிபுணர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

தென் சீனாவின் சிச்வான் பிராந்தியத்தில் அரசின் சிறப்புத் தொடர்புத்துறையின் ஆய்வு நிறுவனத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள ஹாங் யூ பணியாற்றினார் எனவும் அரச ஊடகம் கூறுகிறது.

இவர் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்படுவதற்கு முன்புவரை, 150,000 ரகசிய ஆவணங்களை பெயர் குறிப்பிடாத வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு விற்றதாகக் கூறப்படுகிறது.

அவருக்கு மரண தண்டனை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.