சீன அதிபருக்கு மேலும் ஒரு இராணுவ தலைமைப் பதவி

பட மூலாதாரம், GETTY
பிரசுரிக்கப்பட்டது
சீனாவின் இராணுவம் மீது அதிபருக்கு உள்ள ஆதிக்கத்தை மேலும் வலியுறுத்தும் விதமாக, புதிய இராணுவப் பதவி ஒன்றை அதிபர் ஷீ ஜின்பிங் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சீன இராணுவத்தின் கூட்டு நடவடிக்கை கட்டளை மையத்தின் தலைமை தளபதியாக அவர் பொறுப்பேற்றிருக்கிறார். அந்த மையத்தை இராணுவ உடையில் ஷீ ஜின்பிங் பார்வையிடும் காட்சிகள் சீன அரச ஊடகத்தில் அதிகம் காண்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே மக்கள் விடுதலை இராணுவம் என்ற 23 லட்சம் வீரர்களைக் கொண்ட சீன இராணுவத்துக்கு ஷீ தலைமை தாங்குகிறார். அந்த அமைப்பை நவீன மயப்படுத்தும் அவரது நிலைப்பாட்டை இந்தப் புதிய பதவி குறிக்கின்றது.
தெற்கு சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளின் மீதான உரிமைகோரல்கள் உள்ளிட்ட பல பிடிவாதமான வெளிநாட்டு கொள்கைகள், ஷீ ஜின் பிங்கின் தலைமையிலே எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

























