ஒமாபாவின் கருத்தால் பிரிட்டனில் சர்ச்சை

பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்று வெளிப்படையாக கூறியதன் மூலம், அதிபர் ஒபாமா ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று கோரும் செய்ற்பாட்டாளர்களை கோபப்படுத்தியுள்ளார்.

விண்ட்சர் அரண்மனையில் இன்று இராணியாரை சந்தித்த அவர், பிற்பகலில் பிரதமர் டேவிட் கமெரனையும் சந்தித்தார்.

''பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது மற்றும் உலகெங்கும் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதில் திறமாக செயற்பட, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதே சிறந்தது'' என்று ஒபாமா பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ளார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.