'மதங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசம் காட்ட வேண்டும்': சீன அதிபர்

'மத நிறுவனங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாக்சிஸ கோட்பாடுகளுக்கும் விசுவாசமாக நடக்க வேண்டியது அவசியம் '
படக்குறிப்பு, 'மத நிறுவனங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாக்சிஸ கோட்பாடுகளுக்கும் விசுவாசமாக நடக்க வேண்டியது அவசியம் '
பிரசுரிக்கப்பட்டது

சீனாவின் கலாசாரம் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுமியங்களுக்கு இசைந்துபோகக்கூடிய விதத்தில் அங்குள்ள மதக்குழுக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று அதிபர் ஷீ ஜிங்பிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைநகர் பீஜிங்கில், மதங்கள் தொடர்பான மாநாடு ஒன்றில் பேசிய அதிபர் ஷீ, மத நிறுவனங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாக்சிஸ கோட்பாடுகளுக்கும் விசுவாசமாக நடக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

அந்தக் குழுக்கள் தங்களின் மதக் கோட்பாடுகளில் சமூக நல்லுறவு மற்றும் முன்னேற்றம் போன்ற சோசலிஸ கொள்கைகளுடன் பொருந்தக்கூடிய விடயங்களில் கவனத்தை குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதங்களின் வழியாக 'வெளிநாட்டு ஊடுருவல்' என்று அவர் கூறும் நடவடிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் சீன அதிபர் மத நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.