செர்நோபில் அணு விபத்தின் 30 ஆண்டுகள்

பிரசுரிக்கப்பட்டது

மனித வரலாற்றிலேயே மிகவும் மோசமான அணு விபத்தாக கருதப்படும் செர்நோபில் விபத்து நடந்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டன.

அந்த விபத்தின் போது ஐரோப்பா எங்கிலும் கதிரியக்க மேகங்கள் சூழ்ந்தன. தற்போதைய யுக்ரெய்னின் வடக்கு மூலையில் ஒரு அணு ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீயால் உடனடியாக முப்பத்தொரு பேர் பலியாகினர்.

அதனைச் சுற்றிவரவுள்ள பகுதி தற்போது அநாதரவாக, புதர் சூழ்ந்து கிடகிறது. அங்கு இன்னமும் கதிரியக்க மட்டம் அதிகமாக உள்ளது. இன்று கியேவில் நடந்த நிகழ்வில் அன்று கொல்லப்பட்டவர்களுக்கு அதிபர் பெட்ரோ பொரொசெங்கோ அஞ்சலி செலுத்தினார்.

1986ஆம் ஆண்டில் அணு ஆலை விபத்தின் பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த உதவிய பொறியாளர் ஒருவர் தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறார்.