பெண் செய்தியாளரை பாகிஸ்தான் பாதுகாப்புப்படை கடத்தியதாக புகார்

பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானில் பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட முதல் பெண் செய்தியாளர் ஜீனத் சஹ்சாதி என்று நம்பப்படுகின்றது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்கிற போர்வையில், ஆயிரக்கணக்கான மக்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருக்கும் பாதுகாப்புப்படையினராலேயே இவர் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

காணாமல் போன இவர்களை கண்டுபிடிப்பதற்காக அரசாங்கம் சிறப்பு ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.

ஜீனத்தின் குடும்பத்தினர் இன்னமும் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.