சிரியாவை அழிப்பதை இருதரப்பாரும் நிறுத்த வேண்டும்: பான் கி மூன்

பிரசுரிக்கப்பட்டது

சிரியாவின் தலைவர்கள், தங்களின் குறுகிய தனிப்பட்ட பார்வைகளைக் கடந்து செயற்பட வேண்டும் என்று ஐநாவின் தலைமைச் செயலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டை அழிப்பதை நிறுத்துமாறு மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடமும் கேட்டுக் கொள்வதாக பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் பான் கி மூன் கூறினார்.

சிரியாவின் அலெப்போ நகரில் வியாழனன்று நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் குறைந்தது ஐம்பத்து ஏழு பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னணியிலேயே பான் கி மூன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் கிளர்ச்சிக் குழுக்கள் நடத்திய மோட்டார் தாக்குதலில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.