வங்கதேசத்தில் இந்துமத தையல்காரர் ஒருவர் வெட்டிக்கொலை

பிரசுரிக்கப்பட்டது

வங்கதேசத்தில் இந்து மதத்தவரான தையல்காரர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய ஆயுததாரிகள் அங்கு அண்மைய காலங்களில் நடத்தியுள்ள தாக்குதல்களை ஒத்ததைப் போல இந்த சம்பவமும் நடந்துள்ளது.

தாங்காயில் என்ற மத்திய மாவட்டத்தில் கோபால்பூர் என்ற ஊரில் 52-வயதான நிக்கில் ஜோர்தர் அவரது கடைக்கு முன்னால் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த குறைந்தது இருவர் கத்திகள் மூலம் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த தையல்காரர் 2012-ம் ஆண்டில் முஹமது நபி பற்றி அவதூறான கருத்தொன்றை கூறியிருந்ததாக கூறப்படுகின்ற சம்பவம் இந்தக் கொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

அவ்வேளையில், அந்த தையல்காரர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.