வியட்நாமில் பெருந்தொகை மீன்கள் கரையொதுங்குவதால் ஆர்ப்பாட்டம்

பிரசுரிக்கப்பட்டது

வியட்நாமின் மத்திய கரையோரப்பகுதியில் பெருந்தொகையான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியதை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் ஒன்றுசேர்ந்து அரிதான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

` ஃபோமோசா பிளாஸ்திக்ஸ் நிறுவனமே சூழல் மாசடைந்ததற்கு காரணம் '
படக்குறிப்பு, ` ஃபோமோசா பிளாஸ்திக்ஸ் நிறுவனமே சூழல் மாசடைந்ததற்கு காரணம் '

தாய்வான் எஃகு தயாரிப்பாளர்களான ஃபோமோசா பிளாஸ்திக்ஸ் நிறுவனமே சூழல் மாசடைந்ததற்கு காரணம் என, ஏராளாமான ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சுமத்தினர்.

அந்த நிறுவனம் தவறு ஏதும் இழைத்திருக்கவில்லை என அரசாங்கத்தின் விசாரணை ஒன்று அறிவித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்தக் குற்றஞ்சாடை முன்வைத்துள்ளனர்.

இந்த நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் தாமதாக செயற்படுவதாக ஆத்திரம் வெளிட்டும் ஹனோயில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கடந்த மாதத்தின் ஆரம்பம் முதல் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்க தொடங்கின.

மீன்கள் இறப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து இன்னமும் தெளிவில்லை.