நவ்ரு தீவில் தற்கொலைக்கு முயற்சித்தவர் ஆஸ்திரேலியா மருத்துவமனைக்கு மாற்றம்
பிரசுரிக்கப்பட்டது
பசுபிக் தீவான நவ்ருவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம் ஒன்றில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சோமாலியாவை சேர்ந்த தஞ்சக் கோரிக்கையாளர் ஒருவர் நவ்ரு மருத்துவமனையிலிருந்து ஆஸ்திரேலிய நகரான பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம்,
ஹோடான் யாசின் என்ற 21 வயதான அந்தப் பெண் ஆபத்தான தீக்காயங்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நவ்ருவில் உள்ள அந்த தடுப்பு முகாமில் ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் இரண்டாவது நபராக இப்படியான தற்கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அங்கு சென்றிருந்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளின் முன்னிலையில் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்ட இரான் பிரஜை ஒருவர் பலியாகினார்.




























