வடகொரியா: தொழிலாளர் கட்சியின் காங்கிரஸ் மாநாடு துவங்கியது

தனது ஆட்சியதிகாரத்தை மேலும் உறுதிசெய்யும் விதத்தில் கட்சியின் தலைவர் கிம் ஜோங் உன், இந்த மாநாட்டில் முக்கிய உரையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
படக்குறிப்பு, தனது ஆட்சியதிகாரத்தை மேலும் உறுதிசெய்யும் விதத்தில் கட்சியின் தலைவர் கிம் ஜோங் உன், இந்த மாநாட்டில் முக்கிய உரையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
பிரசுரிக்கப்பட்டது

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர்கள் கட்சி கடந்த 36 ஆண்டுகளில் தனது முதலாவது அரசியல் காங்கிரஸ் மாநாட்டை துவங்கியுள்ளது.

வடகொரியாவில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் நடக்கும் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாக கருதப்படும் இந்த கட்சி மாநாட்டுக்காக நாடெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் தலைநகர் பியோங்யங்-இல் கூடியுள்ளனர்.

தனது ஆட்சியதிகாரத்தை மேலும் உறுதிசெய்யும் விதத்தில் கட்சியின் தலைவர் கிம் ஜோங் உன், இந்த மாநாட்டில் முக்கிய உரையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தனது அணு லட்சியங்களை மீண்டும் வலியுறுத்தும் அதேவேளை, பொருளாதார சீர்திருத்தங்களையும் அவர் அறிவிப்பார் என்று அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

காங்கிரஸ் மாநாடு நடந்துகொண்டிருக்கும் போது, ஐந்தாவது அணு சோதனையையும் வடகொரியா நடத்தக்கூடும் என்ற ஊகங்களும் உள்ளன.

இந்த மாநாட்டின் செய்தி சேகரிப்புக்காக கிட்டத்தட்ட 100 வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு அழைப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.