கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அரசியல்வாதியின் மகனுக்கு எதிராக போராட்டம்

இந்தியாவின் பிஹார் மாநில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
படக்குறிப்பு, இந்தியாவின் பிஹார் மாநில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரது மகன் ஒரு மாணவனை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து அம்மாநில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

காயா நகருக்கு அருகே ஏற்பட்ட தகராறு ஒன்றில் ஒரு பதின்ம வயது நபரை ராக்கி குமார் சுட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தனது மகன் தப்பிச் செல்ல உதவியதற்காக பிண்டேஸ்வரி பிரசாத் யாதவ் போலீஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜரான தந்தை, விரைவில் தனது மகன் காவல் நிலையத்தில் வந்து சரணடைவார் என்று தெரிவித்துள்ளார்.

பீஹாரின் ஆளுங்கட்சியின் உறுப்பினரும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராக்கியின் தாயுமான மனோரமா தேவி, தனது மகன் குற்றமற்றவர் என்று வலியுறுத்திவருகிறார்.