"உலகளவில் நகரங்களில் காற்று மாசு அதிகரிப்பு"
உலகளவில் நகரங்களில் வாழ்பவர்களில் 80% பேர் மோசமாக மாசடைந்த காற்றையே சுவாசிக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

பட மூலாதாரம், AP
அவ்வகையில் நகரங்களில் காற்றிலுள்ள மாசுகள் அதிகரிப்பதால், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்த்மா மற்றும் இதர நோய்களால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என அந்த அமைப்பின் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
காற்று மாசு காரணமாக ஆண்டொன்றுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் ஆயுட்காலம் குறைந்து உயிரிழக்கின்றனர் என அந்த அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், AP
அதிலும் குறிப்பாக ஏழை நாடுகளின் நகரங்களில் வாழும் மக்களே மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
டில்லி, கெய்ரோ, டாக்கா ஆகிய மூன்று நகரங்கள் காற்று மிகமோசமாக மாசடைந்துள்ள நகரங்களின் பட்டியலின் முன்னணியில் உள்ளன.
எனினும் செல்வந்த நாடுகளில் சுவாசிக்கும் காற்றின் தரம் பொதுவாக முன்னேறி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, வீடுகளில் குறைபாடுகளுடைய சூடாக்கும் வசதி, டீசல் ஜெனரேட்டர்கள் ஆகியவை காற்று மாசடைவதற்கு முக்கிய காரணங்கள் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.




























