ஆப்ரிக்காவின் தென் பகுதி நாடுகளில் வறட்சி: நன்கொடை கோரும் செஞ்சிலுவை சங்கங்கள்.

பிரசுரிக்கப்பட்டது

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை அமைப்புகள், ஆப்ரிக்காவின் தென் பகுதி நாடுகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 110 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக கோருகின்றனர்.

ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி
படக்குறிப்பு, ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி

அப்பகுதியில் போதிய அளவு மழையின்மையால் 31.6 மில்லியன் மக்கள் தங்களது உணவை பெறுவதற்கு சிரமபடுகின்றனர்.

கடும் நீர் நெருக்கடியும் அங்கு நிலவுகிறது.

இந்த கோரிக்கை, பருவ நிலை மாற்றத்திலிருந்து சமூகங்களைப் பாதுகாக்க தேவைப்படும் தடுப்பு நடவடிக்கைகளின் அவசியம் குறித்து கவனம் செலுத்தவிருக்கும் ஐ.நா வின் உச்சி மாநாடு ஒன்றிற்கு முன்னதாக வைக்கப்பட்டுள்ளது.