இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியரை வங்கதேச அரசு மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது
மக்கள் கூட்டத்திற்கு முன்னால் அவமானப்படுத்தப்பட்டு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியரை வங்கதேச அரசு மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது.

பட மூலாதாரம், BBC bangladesh
உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமையாசிரியர் சையமல் கன்டி பக்தாவை வலுக்கட்டாயமாக மக்கள் கூட்டத்திற்கு முன்னால் கொண்டு சென்று காதுகளை கைகளால் பிடித்து தோப்புக்கரணம் போட செய்தார். பின்னர் பக்தா மோசமாக தாக்கப்பட்டார்.
இதற்கு எதிரான தங்கள் உணர்வுகளை வங்கதேச மக்கள் தெருக்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர்.
இந்து மதத்தை சேர்ந்த பக்தாவுக்கு தங்களின் மரியாதையை குறித்துக் காட்டும் வகையில் மக்கள் காதுகளை பிடித்து கொண்டிருப்பதாக தங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டனர்.
இஸ்லாமை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை பக்கதா உறுதியாக மறுத்துள்ளார்.
அந்த பள்ளிக்கூடத்தின் மேலாண்மைக் குழுவை பணிநீக்கம் செய்திருக்கிற அரசு இதில் நாடாளுமன்ற உறுப்பினரின் பங்கு பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.




























