பலூஜா நகர் மீது இராக் தாக்குதல் ஆயத்தம்: மக்களைத் தப்பிச் செல்லுமாறு எச்சரிக்கை

பிரசுரிக்கப்பட்டது

ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து பலுஜா நகரை கைப்பற்ற முக்கிய தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதால் ஈராக் அதிகாரிகள் பலுஜா வாசிகளை அந்நகரிலிருந்து தப்பிச் செல்ல ஆயத்தமாகுமாறு எச்சரித்துள்ளனர்.

iraq

பலுஜா நகரில் இருக்கும் 16,000 நகரவாசிகளில் பெரும்பாலானோர் ஐ.எஸ். அமைப்பின் போராளிகளின் குடும்பத்தினர் என நம்பப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கும் மேலான காலத்துக்கு முன்பு இந்நகரத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டது ஐ.எஸ் அமைப்பு. பலுஜா நகரை சுற்றி ஈராக் போலிஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் ஷெல் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரவாதிகள் எண்ணிக்கை தோராயமாக பாதியளவு குறைந்துள்ளதாகத் தாங்கள் நம்புவதாக, ஈராக் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன