பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க மறுத்த பெற்றோர்கள் கைது

பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை கொடுக்க மறுத்த 70 பெற்றோர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

polio

இது தொடர்பாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மேலும் 200 பெற்றோர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற மூன்று நாள் விழிப்புணர்வு முகாமில் எட்டாயிரம் குழந்தைகள் போலியோ தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டதாகவும் ஆனால் இரண்டாயிரம் பெற்றோர்கள் அதற்கு இணங்க மறுத்ததாகவும் பெஷாவரில் உள்ள அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

சுகாதார துறை பணியாளர்கள் ஒற்றர்களாக செயல்படுகிறார்கள் எனக் கூறி ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.