டிரம்ப்புக்கு எதிரானஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாருடன் மோதல்

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் குடியரசுக் கட்சியின் உத்தேசமான வேட்பாளரான டொனல்ட் டிரம்ப் நியூ மெக்சிகோ மாகாணத்தில் நடத்திய பேரணியில், அவரை எதிர்த்த ஆர்பாட்டக்காரர்கள் போலீசாரிடம் மோதினர்.

போராடக்கார்கள் டிர்ம்ப்பின் கோஷங்கள் எழுதப்பட்ட டி-ஷர்ட்களை தீயிட்டு வீசினர். அதோடு கற்களையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் எறிந்தனர். கலவரத்தைத் தடுக்கும் போலீசார் மிளகுத்தூளை பீய்ச்சி அடித்தும், புகை குண்டுகளையும் பதிலுக்கு வீசினர்.

அல்புகெர்க் மாநாட்டு மையத்தில் போராட்டக்காரர்கள், பாதுகாவலர்களால் வெளியேற்றப்படும் வரை, மீண்டும் டிரம்ப்பை இடைமறித்துக்கொண்டே இருந்தார்கள்.

அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.