கறுப்பின மக்களை கொன்றவருக்கு மரண தண்டனை கோரும் அமெரிக்க நீதித்துறை

பிரசுரிக்கப்பட்டது

கடந்த ஜூன் மாதத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தெற்கு கரோலினா தேவாலயத்தில் வழிபாட்டிற்கு வந்த ஒன்பது கறுப்பின மக்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபருக்கு மரண தண்டனையை கோரப்போவதாக அமெரிக்க நீதித்துறை கூறுகிறது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள டைலன் ரூப்
படக்குறிப்பு, குற்றம் சாட்டப்பட்டுள்ள டைலன் ரூப்

அரச தரப்பு தலைமை வழக்கறிஞர் லோரேட்டா லின்ச் கூறுகையில், குற்றத்தின் தன்மை மற்றும் அதன் விளைவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள டைலன் ரூப் மீது வெறுப்புணர்வால் செய்த குற்றம், துப்பாக்கியைப் பயன்படுத்தியது என 33 முக்கிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வெள்ளையின மேலாதிக்க கருத்துக்களை இவர் கொண்டிருந்தார் என்று குற்றம் சாட்டும் அதிகாரிகள், கொலை செய்யப்பட்டவர்களை, அவர்களின் இனம் காரணமாகவே இவர் இலக்கு வைத்தார் என்று தெரிவிக்கின்றனர்.