ஐ.எஸ் தாக்குதல் காரணமாக ஹீட் நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்

பட மூலாதாரம், AP
ஃபலூஜா நகரை மீண்டும் கைப்பற்ற இராக் அரசு படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,. ஐ.எஸ் தீவிரவாதிகள் யூப்ரடெஸ் நதிக்கரையில் இன்னும் வடக்கே அமைந்துள்ள மற்றொரு நகர் மீது பெரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தற்கொலை தாக்குதல்காரர்கள் ஹீட் நகருக்குள் ராக்கெட் தாக்குதல்களை தொடுத்த பின்னர் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பட மூலாதாரம், AP
ஹீட் நகரில் உள்ள பல மாவட்டங்கள் ஐ.எஸ் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக சொல்லப்படுகிறது. இச்சூழலில் பல குடும்பங்கள் அந்நகரை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
அரசு படைகளும், பழங்குடியின போராளிகளும் தொடர்ந்து ஐ.எஸ் தாக்குதல்களுக்கு எதிர் தாக்குதல்களை தொடுத்து வருகிறார்கள்.
கடந்த மாதம்தான், ஐ.எஸ் பிடியிலிருந்து ஹீட் நகரத்தை அவர்கள் மீட்டனர் குறிப்பிடத்தக்கது.




























