குவாண்டநாமோ தடுப்பு முகாமின் எதிர்காலம்

பிரசுரிக்கப்பட்டது

இஸ்லாமிய அரசு அமைப்பின் போராளிகளை குவாண்டனாமோ குடாவுக்கு அனுப்புமாறு கோரும் சட்டம் ஒன்றை அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த தடுப்பு முகாமை மூடப்போவதாக எட்டு வருடங்களுக்கு முன்னதாக அதிபர் ஒபாமா தனது தேர்தல் உறுதி மொழியாக கூறியதை தடுப்பதற்கான ஒரு அண்மைய முயற்சி இது.

அவர் அதிகாரத்தில் இருந்தபோது பல கைதிகள் அங்கிருந்துவிடுவிக்கப்பட்டதுடன்,

மேலும் பலர் ஏனைய சிறைகளுக்கு வரும் காலங்களில் மாற்றப்படவுள்ளனர்.

அந்த வளாகத்துக்கு பிபிசிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது.