பிரான்ஸில் துவங்கவுள்ள யூரோ 2016 போட்டிகள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வரும் வெள்ளிக்கிழமையன்று துவங்கவுள்ள ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக, பிரான்ஸில் உள்ள லியோன் நகரத்தில், தீவிரவாத எதிர்ப்பு சோதனை பயிற்சியொன்றை அந்நாட்டு பாதுகாப்பு படைகள் கடந்த இரவில் மேற்கொண்டன.

பட மூலாதாரம், AFP
ஒரு தற்கொலைப் படை குண்டுதாரி மற்றும் பல துப்பாக்கித் தாக்குதல்கள் ஆகியவை உள்ளடக்கிய ஒரு உருவகப்படுத்தப்பட்ட தீவிரவாத சம்பவத்தை சமாளிக்க நூற்றுக்கணக்கான போலீசார், அவசர உதவி சேவைகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் பாதுகாப்பு சோதனை ஒத்திகை மேற்கொண்டனர்.
51 போட்டிகளைக் கொண்ட யூரோ 2016 கால்பந்து போட்டிகள், பிரான்ஸின் பத்து நகரங்களில் நடக்கவுள்ளது. இதனையொட்டி, எட்டு மில்லியன் (80 லட்சம்) கால்பந்து ரசிகர்கள் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் வரவுள்ள கால்பந்து ரசிகர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் பாரிஸில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




























