கொலைப் பட்டியலுடன் நடமாடிய பிரான்ஸ் கொலையாளி

பிரசுரிக்கப்பட்டது

பிரான்சில் போலிஸ் தளபதி ஒருவரையும் அவரது துணைவியையும் அவர்களது வீட்டில் கொன்றவர், கொல்லப்பட இலக்கு வைத்திருந்த பிற நபர்கள் பட்டியலை வைத்திருந்தார் என்று பிரெஞ்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த இலக்குகளில் அடங்குவர் என்று பாரிஸ் அரச வழக்குரைஞர் பிரான்சுவா மொலின் தெரிவித்தார்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு விசுவாசம் கொண்ட அவர் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தினர்.

பிரான்ஸ் தொடர்ந்து கணிசமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது என்று பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்த் எச்சரித்துள்ளார்.