திருமணத்திற்கு சம்மதிக்காத இளைஞர் மீது ஆஸிட் வீசிய பெண்

பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானில், திருமணத்துக்கு சம்மதிக்காததால், ஆஸிட் தாக்குதலுக்கு உள்ளாகி தீக்காயமடைந்த, 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த இளைஞரின் மீது ஆஸிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் உறவு கொண்டிருந்ததாகவும் ஆனால் தாக்கப்பட்ட இளைஞர், அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்காததால் அவர் மேல் அப்பெண் கோபமாக இருந்ததாகவும் இளைஞரின் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஆஸிட் தாக்குதல் பொதுவான ஒரு விஷயம். ஆனால் அம்மாதிரியான தாக்குதலுக்கு ஆண்கள் உள்ளாவது மிகவும் குறைவே என்பது குறிப்பிடத்தக்கது.