பலூஜாவில் ஐ.எஸ் பிடியிலிருந்து முக்கிய அரசு கட்டிடங்களை இராக் ராணுவம் கைப்பற்றியது

பிரசுரிக்கப்பட்டது

ஃபலூஜா நகரில் ஐ.எஸ் பிடியில் இருந்த முக்கிய அரசு கட்டிடங்களை தாங்கள் கைப்பற்றி உள்ளதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நகரம் இராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து மேற்கில் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இராக் மற்றும் சிரியாவில் இருந்த மற்ற நகரங்களை காட்டிலும் ஃபலூஜா நகரை அதிக நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் ஐ.எஸ் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இராக் ராணுவம் மற்றும் ஐ.எஸ் அமைப்பினர் இடையே 3 வாரங்களாக நடந்து வரும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ஃபலூஜா நகரின் பிற பகுதிகளிலும் சண்டைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராக் தலைநகர் பாக்தாத்திற்கு, ஐ.எஸ் அமைப்பினர் தற்கொலை குண்டுகளை தயார் செய்து அனுப்பி வைப்பதில் ஃபலூஜா நகரம் பிரதான முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இச்சூழலில், இராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினர் நிலப்பரப்பை இழந்துவரும் நிலையில்,இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.