முன்னாள் நாஜி பாதுகாவலர் ரீன்ஹோல்ட் ஹான்னிங்குக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பிரசுரிக்கப்பட்டது

ஜெர்மனியின் அவுஷ்விட்சியில் இருந்த முன்னாள் நாஜி பாதுகாவலர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1,70,000 பேரை கொல்வதற்கு உதவியாக இருந்தார் என்பதற்காக 94 வயதான ரீன்ஹோல்ட் ஹான்னிங் என்பவரை குற்றவாளி என ஜெர்மனியில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

தனது சக்கர நாற்காலியில் சரிந்தபடியே அமர்ந்திருந்த ஹான்னிங், நீதிபதி தீர்ப்பை வாசித்த போது தலையைகூட தூக்கிப் பார்க்கவில்லை.

இந்த தீர்ப்பானது, அவுஷ்விட்சில் உயிர் பிழைத்தவர்களுக்கு குறைந்தபட்ச நீதியாக இருக்கும் என நீதிபதி கூறியுள்ளார்.

மரண முகாமில் ஹான்னிங் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.

ஆனால், அவர் நாஜிக்களின் அதிகார இயந்திரத்தில் ஒரு பகுதியாக இருந்தார் எனவும், இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கு உதவினார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.